மூடிய அறைக்குள் சவீந்திர சில்வா விவகாரம்: ஆசிய நாடுகள் குழு இரகசிய கலந்துரையாடல்.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறித்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக, அவரை ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கும் குழுவுக்குத் தெரிவு செய்த ஆசிய நாடுகள் குழு நேற்று இரகசியமாகக் கூடி ஆராய்ந்துள்ளது.

ஐ.நாவின் அமைதிகாக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவின் கூட்டத்தில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பங்கேற்பது பொருத்தமற்றது என்று தடை விதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து- மூடப்பட்ட அறைக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று நண்பகலுக்குப் பின்னர், ஐ.நாவின் 4வது இலக்க கலந்துரையாடல் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, சவீந்திர சில்வாவை ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்கத் தடைவிதித்த லூயிஸ் பிரெசெற் அம்மையாருக்கும், ஐ.நா பொதுச்செயலருக்கும் ஆசிய நாடுகள் குழு கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும் அவரது இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடிதம் அனுப்புவதற்கு ஒருமித்த கருத்து இல்லையென்று பெப்ரவரி மாதம் ஆசிய நாடுகள் குழுவுக்குத் தலைமை தாங்கும் மாலைதீவு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...

ELUTHAMILA

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா