இலங்கைக்கு எதிரான பிரசாரத்தில் அமெரிக்கா தீவிரம்: தீர்மானத்தை தோற்கடிக்க ஆபிரிக்கா சென்ற பீரிஸ்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  19 ஆவது கூட்டத்தொடர் சுவிட்ஸர்லாந்து தலைநகர்  ஜெனீவாவில்  இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் நிலையில், இக்கூட்டத்தில் அமெரிக்க அனுசரணையுடன் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று ஆபிரிக்காவுக்குப் புறப்பட்டார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் கடந்த ஒருவார காலமாக ஜெனீவாவில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜெனீவாவில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திய நிலையில் அமைச்சர் பீரிஸ் நேற்று ஆபிரிக்காவுக்குப் புறப்பட்டார்.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கையில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் தனது தூதுவர்களை அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ளதாக ஆபிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்னர் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

ELUTHAMILA

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா