அதியுச்சதிமிர் என்று சீனாவை விமர்சித்த அமெரிக்கா.

சிரியா விவகாரம் தொடர்பாக சீனாவின் நிலைப்பாட்டை விமர்சித்து அமெரிக்கா “அதியுச்சதிமிர்” என்று கருத்து தெரிவித்திருந்தது. இக்கருத்துக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

சிரியா விவகாரம் தொடர்பாக சீனாவின் நிலைப்பாட்டை விமர்சித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்(Hilary Clinton) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா குறித்த ஐ.நா.வின் தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோவை பயன்படுத்தியது வெறுக்கத்தக்க ஒன்று என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில், ஈராக்கில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு அரபு மக்களுக்காகப் பேச அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிரிய ஜனாதிபதி அசாத்துக்கு மறுசீரமைப்புக்களை செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சீனா விரும்புவது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...

ELUTHAMILA

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா

எழுதமிழா